"கொரோனா பரவலால் வடகொரியா நிலைமை மோசமாகி வருகிறது" - உலக சுகாதார அமைப்பு
கொரோனா பரவலால் வடகொரியாவின் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரையன், வடகொரியாவில் நிலவும் உண்மையான நிலையை கண்டறிவதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் வடகொரிய அரசு முழுமையான தரவுகளை வழங்காததால் சீனா, தென் கொரியா போன்ற அண்டை நாடுகளின் மூலம் அந்நாட்டின் நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் வடகொரிய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதது குறித்து கவலை தெரிவித்த மைக் ரையன், உலக சுகாதார அமைப்பு பலமுறை தடுப்பூசி உள்ளிட்டவற்றை அந்நாட்டுக்கு வழங்க முன்வந்ததாக தெரிவித்தார்.
Comments